Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொரோனா பாதிப்பு - 85000 கோடி ரூபாயை இழந்த தமிழக அரசு!

கொரோனா பாதிப்பு - 85000 கோடி ரூபாயை இழந்த தமிழக அரசு!
, சனி, 27 ஜூன் 2020 (08:43 IST)
கொரோனா வைரஸ் பரவலால் தமிழக அரசு சுமார் 85,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவும்  விகிதம் அதிகமாகிக் கொண்டே உள்ளது. பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு மிகப்பெரிய அளவில் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தொழிற்சாலைகள் மற்றும் கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளதால தமிழக அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இது சம்மந்தமாக திருச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ‘இரு மாதங்களில் மட்டும் நாம் ரூ 35,000 கோடி இழப்பை சந்தித்துள்ளோம். மேலும் மாதம் தோறும் 12,000-13,000 கோடி ரூபாய் வரை இழப்பை சந்திப்போம் என நிதித் துறைச் செயலாளர் கணக்கிட்டுள்ளார். அதன் படி ஒட்டுமொத்தமாக தமிழகம் 85,000 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் 784 மரணங்கள் – மேலும் சில அதிர்ச்சித் தகவல்கள்!