Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தை பதம் பார்க்கும் பருவமழை! – சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்!

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (17:07 IST)
தமிழகத்தில் பருவமழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல இடங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகங்கள், தமிழக அரசு மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மழை அதிகமாக உள்ள மாவட்டங்களான கடலூர், திருச்சி, வேலூர், நாகை, மதுரை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், அரியலூர், பெரம்பலூர், விருதுநகர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளை கண்காணிக்க 10 ஐஏஎஸ் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மழை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பதில் ஐஏஎஸ் அதிகாரிகள் ஈடுபடுவர் என்றும் தமிழக அரசு அந்த அறிவிப்பில் தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

1 முதல் 5ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்: மகாராஷ்டிரா முதல்வர் அதிரடி அறிவிப்பு..!

தங்கம் விலை உயர்ந்ததற்கு பிரதமர் மோடி தான் காரணம்.. சித்தராமையா

இம்ரான்கான் சகோதரிகள் மூவர் அதிரடி கைது.. என்ன காரணம்?

அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்யும் செல்லும் ராகுல் காந்தி.. என்ன காரணம்?

ஜனாதிபதிக்கு கெடு விதிக்கும் தீர்ப்பு.. அவசர சட்டம் கொண்டு வருகிறதா மத்திய அரசு?

அடுத்த கட்டுரையில்
Show comments