ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நளினி, தன்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
நளினி 25 வருடங்களுக்கும் மேலாக, சிறையில் இருக்கிறார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதன் தீர்ப்ப இன்று அளிக்கப்பட்டது.
தீர்ப்பளித்த நீதிபதி “ராஜீவ் காந்தி வழக்கில், கைது செய்யப்பட்ட 7 தமிழர்களை, உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு முடிவு எடுக்கலாம்” என்று தீர்ப்பளித்த நீதி, இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக கூறினார்.