Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் எங்கெங்கு பேருந்துகள் செயல்படும்? விதிமுறைகள் என்ன?

Advertiesment
தமிழகத்தில் எங்கெங்கு பேருந்துகள் செயல்படும்? விதிமுறைகள் என்ன?
, வெள்ளி, 15 மே 2020 (09:10 IST)
தமிழகத்தில் பல பகுதிகளில் கொரோனா பாதிப்புகள் குறைந்துள்ள நிலையில் அந்த பகுதிகளில் பேருந்துகள் இயக்குவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கினால் பேருந்து உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து வசதிகளும் தடை செய்யப்பட்டது. மூன்று கட்ட ஊரடங்கு முடிய உள்ள நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நான்காம் கட்ட ஊரடங்கில் தளர்வுகள் அதிகபடுத்தப்படும் என்பதால் போக்குவரத்துகள் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்திற்குள் பேருந்துகளை இயக்குவது குறித்து தமிழக போக்குவரத்து கழகம் ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்கள் கொரோனா இல்லாத பச்சை மண்டலங்களாக மாறியுள்ளன. இந்த பகுதிகளில் குறைந்த அளவிலாக உள்ளூர் பேருந்து சேவைகளை இயக்கவும், ஆரஞ்சு மண்டலங்களில் விதிமுறைகளுடன் குறைவான அளவில் பேருந்துகளை இயக்கவும், சிவப்பு மண்டலங்களில் பாதிப்பு குறையும் வரை முற்றிலும் பேருந்து சேவைகளை இயக்காமல் இருக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதுதவிர அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு செல்வோர் 044-24794709 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் பேருந்து சேவை அளிக்கப்படும் சமயத்தில் அவர்களுக்கு மட்டும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்து சேர்ந்தது முதல் ரயில்! 797 பேர் கொரோனா சோதனைக்காக காத்திருப்பு!