Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்குத் தினமும் தண்ணீர்… 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு – எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு !

Webdunia
வெள்ளி, 21 ஜூன் 2019 (16:29 IST)
வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்குத் தினமும் ரயில் மூலம் தண்ணீர்க்கொண்டு வருவதற்காக 65 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது தமிழக அரசு.

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில மாதங்களாக மழை பொய்த்து போனதால் கடுமையான தண்ணீர்ப்பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பிரச்சனை காரணமாக பல ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாகவும், ஒருசில ஓட்டல்களில் மதிய சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் இதுகுறித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியோ தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் நவம்பர் மாதம் வரைக் கையிருப்பு உள்ளது. தண்ணீர்ப் பஞ்சம் என்பது எதிர்கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி எனக் கூறி மக்களை அதிருப்தியடைய வைத்துள்ளார். 

இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தண்ணீர் பிரச்சனைப் பற்றி அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். இதில் ’தமிழகத்துக்கு சீராக தண்ணீர் விநியோகம் செய்வதற்காக கூடுதலாக 200 கோடி ரூபாய் ஒதுக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னைக்குக் வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் ரயில் மூலம் சுமார் 10 மில்லியன் லிட்டர் குடி தண்ணீரைக் கொண்டுவருவதற்காக தனியாக 65 கோடு ரூபாய் ஒதுக்கியுள்ளார்’ என அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரிக்கும் கனமழை: சென்னையில் 24 மணி நேர ஆவின் பாலகங்கள்!

தொழில் அதிபர், ரியல் எஸ்டேட் அதிபர், முன்னாள் அதிகாரி.. சென்னையில் திடீரென சிபிஐ அதிகாரிகள் சோதனை..

சாக்குப்பையில் இளம்பெண்ணின் பிணம்.. விரைவுச்சாலையில் தூக்கி வீசப்பட்டதா?

கனமழை எச்சரிக்கை எதிரொலி: முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை..!

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புயல்.. புயலுக்கு என்ன பெயர் தெரியுமா?3

அடுத்த கட்டுரையில்
Show comments