Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சளி, இறுமல் இருந்தால் வேலைக்கு போகக் கூடாது! – அரசின் புதிய கட்டுப்பாடுகள்!

Webdunia
ஞாயிறு, 7 ஜூன் 2020 (09:58 IST)
தமிழகத்தில் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்புகள் குறைவாக இருந்தாலும், சில மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தளர்வுகள் அளிக்கப்பட்டு கடைகள், அங்காடிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, வணிக நிறுவனங்கள், அங்காடிகளில் கண்டிப்பாக ஊழியர்கள் அனைவரும் முக்கவசம், கையுறை அணிய வேண்டும்.

அனைத்து கடைகளின் முகப்பிலும் சானிட்டைசர், கிருமி நாசினி பாட்டில்கள் வைக்கப்பட வேண்டும்.

கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தால் உள்ளே அனுமதிக்கக் கூடாது.

வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும்.

ஊழியர்கள் யாருக்காவது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வேலைக்கு செல்லக் கூடாது.

இவ்வாறு பல்வேறு முக்கியமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments