எலெக்‌ஷன் நெருங்கி வருது, அரசியல் கூட்டத்துக்கு அனுமதி! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
புதன், 16 டிசம்பர் 2020 (09:46 IST)
தமிழகத்தில் கொரோனா காரணமாக அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா காரணமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாதாமாதம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கான தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போது அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள், விளையாட்டு, கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. பின்னர் கொரோனா அபாயம் கருதி வழங்கப்பட்ட அனுமதி திரும்ப பெறப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் டிசம்பர் 19 முதல் அரசியல், மத நிகழ்ச்சிகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை திறந்த வெளியில் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்தவெளியின் அளவு பொறுத்து அதில் கொள்ளக்கூடிய மொத்த நபர்களின் எண்ணிக்கையில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments