Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முப்படை தளபதி பிபின் ராவத்தின் புகைப்படம்! – தமிழக ஆளுனர் அஞ்சலி!

முப்படை தளபதி பிபின் ராவத்தின் புகைப்படம்! – தமிழக ஆளுனர் அஞ்சலி!
, வியாழன், 9 டிசம்பர் 2021 (11:01 IST)
இந்தியாவின் முப்படை தளபதி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது படத்திற்கு தமிழக ஆளுனர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நேற்று குன்னூரில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவத்தின் முப்படை தளபதி பிபின் ராவத் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர்கள், கட்சி தலைவர்கள், பிறநாட்டு தலைவர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இன்று அவரது பூத உடல் டெல்லி கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில் பாரதிதாசன் பல்கலைகழக வளாகத்தில் அவரது உருவப்படம் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் காவல் அதிகாரிகள், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வலிமைக்கு இடமில்லை.. 8வது இடத்தில் மாஸ்டர்! – இந்த ஆண்டின் டாப் 10 ஹேஷ்டேகுகள்!