எந்தெந்த ஆலைகள் இயங்கலாம்? – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (12:50 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏப்ரல் 20க்கு பிறகு தொழில்துறைகளுக்கு தளர்வு அளிக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. ஆனாலும் தமிழக அரசு ஊரடங்கு முடியும்வரை தளர்வுகள் அளிக்கப்போவதில்லை என அறிவித்தது.

இன்று முதல்வர் பழனிசாமி தமிழக தொழில் அதிபர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து ஊரடங்கு முடியும் நிலையில் முதற்கட்டமாக சில ஆலைகள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி சுத்திகரிப்பு நிலையங்கள், இரும்பு, சிமெண்ட், பெயிண்ட் உள்ளிட்ட ரசாயன ஆலைகள், கரும்பு, உர ஆலை, கண்ணாடி, டயர் ஆலைகள், மிகப்பெரிய காகித ஆலைகள்  உள்ளிட்ட ஆலைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மொபைல் போனை ரிப்பேருக்கு கொடுத்த இளைஞர்.. சிக்கிய அதிர்ச்சி வீடியோக்கள்.. 22 ஆண்டு சிறை..!

மாதம் ஒரு நாள் மாதவிடாய் விடுப்பு.. தனியார் நிறுவனங்களுக்கும் பொருந்தும்: அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏஐ மூலம் மாணவிகளின் படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்: ஐஐஐடியில் அதிர்ச்சி சம்பவம்!

2 நாட்களில் 35 பேர் நாய்க்கடியால் பாதிப்பு.. தென்காசி அருகே மக்கள் பதட்டம்..!

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு.. எந்த நாட்டு எழுத்தாளருக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments