Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தினமும் ஒரு லட்சம்: உலக அளவில் 26 லட்சத்தை தாண்டிய கொரோனா பாசிட்டிவ்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (12:37 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் உலகம் முழுவதும் நேற்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சமாக இருந்த நிலையில் இன்று 26 லட்சமாக உயர்ந்துள்ளது. தினமும் ஒரு லட்சம் என்ற விகிதத்தில் உலகம் முழுவதும் வைரஸ் மற்றும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன
 
உலகம் முழுவதும் 26,38,024 பேர் பகொரோனாவால் பாதிப்பு அடைந்தாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,84,235 என்றும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,21,734 என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
 
 
கொரோனாவுக்கு அமெரிக்காதான் உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் அந்நாட்டில் மட்டும் 849,092 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும், அதேபோல் கொரோனாவுக்கு 47,681 பேர் பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
அமெரிக்காவை அடுத்து ஸ்பெயினில்  208,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இத்தாலியில் 187,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரான்ஸில் 21,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜெர்மனியில் 150,648 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 
 
உலகிலேயே கொரோனாவில் இருந்து தப்பித்த ஒரே நாடு ஏமன் என்றும் இங்கு ஒரே ஒருவர் மட்டுமே கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவரும் இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனுமதியின்றி நெடுஞ்சாலையில் ரேக்ளா போட்டி: குதிரைக்கு காயம்! கோவை அருகே பரபரப்பு..!

அன்புமணியை நான் கொஞ்சம் விவரமானவர் என்று நினைத்தேன்.. அமைச்சர் துரைமுருகன்

திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த நகைகள் திருட்டு.. கதறி அழுத சிஆர்பிஎப்., பெண் காவலர்..!

சென்னை உள்பட 28 மாவட்டங்கள்.. இன்றிரவு கொட்டப்போகுது கனமழை: வானிலை எச்சரிக்கை..

எத்தனை வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கினாலும் பீகாரில் பாஜக ஜெயிக்காது: பிரசாந்த் கிஷோர்..

அடுத்த கட்டுரையில்
Show comments