மதுரையில் முழுமுடக்கம் மேலும் நீட்டிப்பு! – தமிழக அரசு அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 12 ஜூலை 2020 (14:24 IST)
மதுரையில் இன்றுடன் முழுமுடக்கம் முடியவுள்ள நிலையில் மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு நீட்டித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையில் கொரோனா தொற்றுகள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக மதுரையிலும் முழுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இன்றுடன் மதுரையில் முழுமுடக்கம் முடிய உள்ள நிலையில் பாதிப்புகளை கருத்தில் கொண்டு மேலும் இரண்டு நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் 14ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுரையில் ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

260 பேர் உயிரிழந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானி தான் காரணமா? சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..!

வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வு: வடகிழக்குப் பருவமழை தீவிரம்

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உண்மையிலேயே மனசாட்சி அரசியல் செய்யாமல் போய்விடுங்கள்: குஷ்பு

பெண்களுக்கான அரசு என்று கூறுவதற்கு பொம்மை முதல்வரும், அவரது மகனும் கூச்சப்பட வேண்டும்: ஈபிஎஸ்

காதலிக்க மறுத்த கல்லூரி மாணவி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய இளைஞர்.. கரூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments