தமிழகத்தில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அடுத்ததாக உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் முடிவடைந்தும் பல்வேறு காரணங்களால் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் குறித்த நீதிமன்ற வழக்குகள் முடிவடைந்ததால் தேர்தல் பணிகள் துரிதமாக துவங்கப்பட்டு உள்ளன.
உள்ளாட்சி தேர்தல் நவம்பர் அல்லது டிசம்பரில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான சின்னம் ஒதுக்கீடு பணிகளை முடித்துள்ளது தமிழக தேர்தல் ஆணையம்.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கான சின்னங்கள், பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளுக்கான சின்னங்கள் மற்றும் பொதுப்பிரிவு சின்னம் என மூன்று பிரிவுகளாக சின்னங்களை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.