தமிழகம் முழுவதும் கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தொழிலதிபர்களுடன் இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பல தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளதாம் மக்கள் பலர் வேலையின்றி சிரமப்படும் அதேசமயம் வணிக துறை உற்பத்திகளும் குறைந்துள்ளதால் தமிழகம் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 20க்கு பிறகு மாநில அரசுகள் விலக்குகள் அளித்த நிலையில் தமிழகம் விலக்கு இல்லா ஊரடங்காக இதை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக தொழிலதிபர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணோளி மூலம் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். இதில் மே 3க்கு பிறகு தொழிற்சாலைகளை இயக்குதல், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொழிற்சாலையில் பேணுதல் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.