Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரேசன் கடைகளில் இலவச மாஸ்க்!? – எடப்பாடியாரின் அசத்தல் முடிவு!

Webdunia
செவ்வாய், 2 ஜூன் 2020 (13:46 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் முகக்கவசங்களை இலவசமாக வழங்க பரிசீலித்து வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பில் இந்திய அளவில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஐந்தாம் கட்ட பொதுமுடக்கம் அமலில் உள்ளது. எனினும் தொழில்துறைகள் செயல்பட அரசு தளர்வுகளை அளித்துள்ளது. சென்னையிலும் டாக்ஸி, ஆட்டோக்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழத்தின் கொரோனா நிலவரம் குறித்து பேசியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி “கொரோனாவை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்தியாவிலேயே அதிக வெண்டிலேட்டர்கள் தமிழகத்தில்தான் உள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும் தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச மாஸ்க்குகள் வழங்க பரிசீலித்து வருவதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments