சிறைகளில் உள்ள கைதிகளை உறவினர்கள் சந்தித்து பேச நவீன வசதிகள் ஏற்படுத்தப்படுவதாக சிறைத்துறை டிஜிபி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மத்திய சிறைகளில் ஏராளமான கைதிகள் சிறை தண்டனை பெற்று இருந்து வரும் நிலையில் அவர்களை உறவினர்கள் சந்தித்து பேசிக் கொள்ள சமீப காலம் வரை கம்பிகள் அமைத்த சாளரம் வழியாக பார்த்து பேசிக் கொள்வதே நடைமுறையில் உள்ளது,
கம்பிகள் வழியாக பொருட்கள் கொடுப்பதை தவிர்க்க வெளிநாடுகளில் உள்ளது போல கண்ணாடி தடுப்பு, இருப்பக்கமும் போன்கள் ஆகியவற்றை அமைக்க உள்ளதாக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக மதுரை, கோவை, திருச்சி சிறைகளில் அமைக்கப்படும் இந்த வசதி பின்னர் பல சிறைகளுக்கு விரிவுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.