தமிழக சட்டப்பேரவையில் 2017-18ம் ஆண்டிற்கான பட்ஜெட், சட்டசபையில் நிதியமைச்சர் ஜெயக்குமாரால் இன்று தாக்கல் செய்யபப்டுகிறது.
பள்ளிக்கல்வி ஊக்கத்தொகை வழங்க ரூ.23 கோடி ஒதுக்கீடு.
விலையில்லா மிதிவண்டிகள் வழங்க ரூ. 180 கோடி ஒதுக்கீடு.
மாணவர் இலவச திட்டங்களுக்கு ரூ1,503 கோடி ஒதுக்கீடு.
மகளிர் ஸ்கூட்டர் வாங்க ரூ200 கோடி நிதி ஒதுக்கீடு.
உயர்கல்வி துறைக்கு ரூ.3680 கோடி ஒதுக்கீடு.
மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 312 நோய்களுக்கான சிகிச்சைகள் புதிதாக சேர்ப்பு.
12 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.
முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ. 928 கோடி ஒதுக்கீடு.
மகப்பேறு உதவி திட்டத்துக்கு ரூ1,001 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் கீழ் 20,000 வீடுகள் கட்ட ரூ. 2,000 கொடி ஒதுக்கீடு.
பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 20,000 வீடுகள் கட்ட ரூ. 420 கோடி ஒதுக்கீடு.
அடல் நகர்புற புத்துணர்வு திட்டத்திறகு ரூ. 3,834 கோடி ஒதுக்கீடு.
புதிய பேருந்துகள் வாங்க ரூ.120 கோடி ஒதுக்கீடு.
100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்வு.
இலவச வேட்டி சேலைக்கு பட்ஜெட்டில் ரூ 490 கோடி ஒதுக்கீடு.
மதுரை, சேலம், திருச்சியில் தொழில் ஊக்குவிப்பு மையம்
தொழில்துறைக்கு ரூ. 2,088 கோடி, ஐடி வளர்ச்சிக்கு ரூ.116 கோடி ஒதுக்கீடு.
குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த தரக் கட்டுபாட்டு மையம் அமைக்கப்படும்.
ரூ. 5 கோடியில் உதகையில் நகரக விற்பனை கண்காட்சி திடல் அமைக்கப்படும்.
ஸ்ரீபெரும்புதூரில் மின்னணு பொருள் உற்பத்தி மையம், ராமேஸ்வரத்தில் கடல் உணவுப் பொருள் குழுமம் அமைக்கப்படும்.
காஞ்சி, கரூரில் ஜவுளி குழுமம், தருமபுரியில் உணவுப் பொருள் குழுமம் அமைக்கப்படும்.
744 கோடி ரூபாய் செலவில் சென்னை புறநகர் சாலைத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இலவச மடிக்கணிணிக்கு ரூ.880 கோடி ஒதுக்கீடு.
உலக முதலீட்டாளர் மாநாட்டு நடத்த ரூ75 கோடி நிதி ஒதுக்கீடு.
100 யூனிட் இலவச மின்சார திட்டம் தொடரும்
காஞ்சிபுரத்தில் 330 ஏக்கரில் ரூ. 130 கோடியில் மருத்துவ பூங்கா.
கோவில் அன்னதான திட்டம் தொடர்ந்து செயல்படும்.
ஏழை குடும்பங்களுக்கு 3.5 லட்சம் இலவச வீட்டு மனைப் பட்டா
சென்னை புறநகர் சாலை திட்டங்களுக்கு ரூ744 கோடி ஒதுக்கீடு
புதிய பாலங்கள், சாலை அகலப்படுத்தும் பணிக்கு ரூ3,100 கோடி ஒதுக்கீடு.
நெடுஞ்சாலை துறைக்கு ரூ.10,067 கோடி ஒதுக்கீடு.
முக்கிய சாலைகளை நான்கு வழி சாலையாக மாற்ற் ரூ.1,508 கோடி ஒதுக்கீடு.
போக்குவரத்து துறைக்கு ரூ.2,192 கோடி ஒதுக்கீடு.
எரிசக்தி துறைக்கு ரூ.982 கோடி ஒதுக்கீடு.
தொழிலாளர் நலத்துறைக்கு 1,010 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
குடிமராமத்து பணிக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
பால்வளத்துறைக்கு ரூ.130 கோடி ஒதுக்கீடு.
வருவாய் துறைக்கு ரூ. 5,695 கோடி ஒதுக்கீடு.
நிதிதுறைக்கு ரூ.984 கோசி ஒதுக்கீடு.
நீர்வள ஆதார துறைக்கு ரூ.4,791 கோடி ஒதுக்கீடு.
திருமண உதவி திட்டத்திற்கு ரூ.723 கோடி ஒதுக்கீடு.
உணவு மானியத்திற்கு ரூ. 5,500 கோடி ஒதுக்கீடு.
தொழிலாளர் நலத்துறைக்கு 1,010 கோடி ரூபாய் ஒதுக்கீடு
மீனவர்களுக்கு 5000 வீடுகள், மீன்பிடி தடை காலத்திற்கு ரூ.5000 உதவி தொகை.
6 லட்சம் வெள்ளாடு. செம்மறி ஆடு, 12,000 கறவை பசு வழங்க ரூ.182 கோடி ஒதுக்கீடு..
100 நாள் வேளைத்திட்டத்திற்கு ரூ. 1000 கோடி ஒதுக்கீடு.
சமூல நலத்துறைக்கு ரூ.1,781 கோடி ஒதுக்கீடு.
சுற்றுசூழல் மற்றும் வனத்துறைக்கு ரூ.567 கோடி ஒதுக்கீடு.
முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு உதவி தொகைக்கு ரூ.582.58 கோடி ஒதுக்கீடு.
வேளாண்துறைக்கு ரூ.1,680.73 கோடி ஒதுக்கீடு.
பயிர் காப்பீடுக்கு ரூ.523 கோடி ஒதுக்கீடு.
மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி ஒதுக்கீடு.
உள்ளாட்சி தேர்தலுக்கு ரூ.174 ஒதுக்கீடு.
10 புதிய வட்டாச்சியர் அலுவகங்கள் கட்டுவதற்கு ரூ.42.16 கோடி ஒதுக்கீடு.
தீயணைப்பு துறை மேம்பாட்டிற்கு ரூ. 273 கோடி ஒதுக்கீடு.
காவல் துறை மேம்பாட்டிற்கு ரூ.47,691 கோடி ஒதுக்கீடு.
நகர்புற வறுமை ஒழிப்பிற்கு ரூ.272 கோடி ஒதுக்கீடு.
31.03.2016 வரை விவசாயிகள் வாங்கிய ரூ.6.040 பயிர் கடன் தள்ளுபடி.
வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
வர்தா புயலால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களுக்கு ரூ.585 கோடி ஒதுக்கீடு.
குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.615 கோடி ஒதுக்கீடு.
சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்காக ரூ. 75 கோடி ஒதுக்கீடு.
2017-18 ஆண்டின் கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ.7,000 கோடி பயிர்க்கடன் வழங்கப்படும்.
தமிழக பட்ஜெட் திட்ட மொத்த மதிப்பீடு ரூ. 1,59,362 கோடி.
பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன் அம்மா புகழைப்பாடி அதில் சசிகலாவின் பெயரை குறிப்பிட்டதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு.
2017-18 ஆம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் உரையை சட்டப்பேரவையில் வாசிக்க துவங்கினார் அமைச்சர் ஜெயக்குமார்.
இன்று காலை ஜெ.வின் சாமாதிக்கு சென்ற அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் உரையை அவரது சமாதியில் வைத்து அஞ்சலி செலுத்தினார்..
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த பட்ஜெட் நிதிநிலை பற்றாக்குறை மக்கள் நலத் திட்டங்களை பாதிக்காத வண்னம் சிறப்பான பட்ஜெட்டாக இருக்கும் எனப் பேட்டி...