Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் கிட் சோதனை! நிலவரம் என்ன?

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (10:45 IST)
தமிழகத்தில் இன்று முதல் கொரோனா சோதனைக்காக ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளைப் பயன்படுத்துவது நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவைக் கண்டறியப்படும் பிசிஆர் முறை பின்பற்றப் பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரேபிட் கிட் மூலம் பரிசோதனை மேற்கொண்டால் 6 முதல் 71 சதவீதம் வரை மாறுபட்ட முடிவுகள் ராஜஸ்தான் மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. மேலும் சில மாநில அரசுகளும் இதுபோன்ற முடிவுகளை தெரிவித்துள்ளனர்.

இதனால் புதிதாக வாங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்களை அடுத்து இரண்டு நாட்களுக்கு பயன்படுத்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட ரேபிட் டெஸ்ட் கிட்கள் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் எப்போது பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்று ரேபிட் டெஸ்ட் கருவிகள் மூலம் செய்யப்படும் சோதனை நிறுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 34000 ரேபிட் கருவிகள் தமிழகத்தில் கைவசம் உள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.அடுத்த கட்ட முடிவுகள் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments