Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொடங்கியது தமிழக வேளான் பட்ஜெட் கூட்டத்தொடர்! – சிறப்பு அறிவிப்புகள் என்னென்ன?

தொடங்கியது தமிழக வேளான் பட்ஜெட் கூட்டத்தொடர்! – சிறப்பு அறிவிப்புகள் என்னென்ன?
, சனி, 19 மார்ச் 2022 (10:34 IST)
தமிழக ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் திமுக கடந்த ஆண்டு ஆட்சி அமைத்தது முதலாக பட்ஜெட் தாக்கலில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கலை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் இந்த முறை தமிழ்நாடு 2022-23ம் ஆண்டுக்கான ஆண்டு பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட 86 அறிவிப்புகளில் 80 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பட்ஜெட்டில், சிறுதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியை அதிகரிக்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளின் வருமானதை அதிகரிக்க மாநில வேளாண் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இயற்கை வேளாண்மை ஊக்குவிக்க சிறப்பு நிதி ஒதுக்கீடு.

3204 கிராம பஞ்சாயத்துகளில் ₹300 கோடி மாநில அரசின் நிதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும்.

150 வேளாண் தொகுப்புகளை 7,500 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கிட ₹5 கோடி ஒன்றிய அரசு - மாநில அரசின் நிதியில் செயல்படுத்தப்படும்.

நெல் ஜெயராமன் மரபுசார் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம் மூலம் 20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ₹300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ₹71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

30,000 மெட்ரிக் டன் அளவில் நெல் பயிர் வகைகள், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை ஐஐடியில் அடுத்தடுத்து 4 மான்கள் உயிரிழப்பு! – ஆந்த்ராக்ஸ் நோய் காரணமா?