Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமருக்கு விளக்கு பூஜை, மாரியாத்தாவுக்கு கூழ்: வைரலாகும் தமிழிசையின் புகைப்படங்கள்

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2020 (20:29 IST)
ராமருக்கு விளக்கு பூஜை, மாரியாத்தாவுக்கு கூழ்
அயோத்தியில் இன்று ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு, பூமி பூஜை போடப்பட்டதை அடுத்து சமூக வலைதளங்களில் பலர் இது குறித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இந்த நிலையில் முன்னாள் தமிழக பாஜக தலைவரும் தற்போதைய ஆந்திர மாநில கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் தனது வீட்டில் ராமர் படத்தை வைத்து அதற்கு விளக்கு பூஜையும் செய்தார். இதுகுறித்த புகைப்படங்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் 
 
இந்த நிலையில் டுவிட்டரில் பிரபலமாக இருக்கும் ஒருவர் ’இதே போன்று மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தி தி ஒரு போட்டோவை போடுங்க மேடம்’ என்று கிண்டலாக கூறியிருந்தார். இந்த கிண்டலை அப்படியே சீரியஸாக எடுத்துக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன் மாரியாத்தாவுக்கு கூழ் ஊத்தி வேப்பிலை சாத்தி வணங்கி இருக்கும் புகைப்படம் ஒன்றையும் உடனடியாக பதிவு செய்துள்ளார் 
 
மேலும் ’அப்படியே மாரியாத்தாவுக்கு கூழ் வைத்து வேப்பிலை சாத்தி வணங்கியிருக்கிறோம் இறைவழிபாட்டில் எமக்கு வேறுபாடு கிடையாது.... என்றும் அவர் தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தரராஜன் இந்த இரண்டு டுவிட்டுகளும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments