சிறைக்கதவுகள் சின்னம் தான் அமமுகவுக்கு பொருத்தமாக இருக்கும்: தமிழிசை கிண்டல்

Webdunia
வியாழன், 2 மே 2019 (18:28 IST)
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசியபோது, பாஜகவின் கிளைக்கட்சியாக அதிமுக செயல்பட்டு வருவதாகவும், இதனால் அதிமுக கொடியின் நடுவில் காவியை சேர்த்து கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்றும் கூறினார். 
 
டிடிவி தினகரனின் இந்த கருத்துக்கு ஏற்கனவே அதிமுக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் இன்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கிண்டலுடன் கூடிய ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
 
 'டிடிவி தினகரன் கட்சி அமமுக தேர்தல் சின்னமாக பரிசு பெட்டிக்குப்பதில் பெங்களூர் சிறைக்கதவுகளை சின்னமாக கேட்டுபெறலாமே? என்று தமிழிசை கூறியுள்ளார். தமிழிசையின் இந்த டுவிட்டுக்கு ஆதரவும் கிண்டலான விமர்சனங்களும் பதிவாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்யார்' புயல் உருவானது: வானிலை ஆய்வு மையம் தகவல்.. தமிழகத்திற்கு பாதிப்பா?

இந்தியா ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு அல்ல, அனைவருக்கும் சொந்தமானது: முதல்வர் ஸ்டாலின்

2 நாள் சரிவுக்கு பின் இன்று ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற பங்குச்சந்தை: இன்றைய நிப்டி நிலவரம்..!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.95,000ஐ நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சி.!

கண்டுகொள்ளாத பாஜக!.. கடுப்பில் செங்கோட்டையன்!. தவெகவில் இணைவதன் பின்னணி!...

அடுத்த கட்டுரையில்
Show comments