Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மோடி தோல்வி அடைவார் என்று கூறிய வைகோவுக்கு நன்றி! தமிழிசை

Webdunia
ஞாயிறு, 30 டிசம்பர் 2018 (20:37 IST)
கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக கூட்டணியில் முதலில் இணைந்தது வைகோவில் மதிமுக தான். அதேபோல் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தவுடன் பதவியேற்கும் முன்னரே அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதும் மதிமுகதான்

இந்த நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருப்பதாக கூறிக்கொள்ளும் வைகோ, பிரதமர் மோடியையும் பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். வரும் பாராளுமன்ற தேர்தலில் மோடி தோல்வி அடைவார் என்று அவர் ஒவ்வொரு மேடையிலும் பேசி வருகிறார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், 'பிரதமர் மோடி படுதோல்வியடைவார் எனக்கூறிய வைகோவுக்கு நன்றி என்றும், அவருடைய பேச்சு எப்போதுமே எதிர்மறையாகத்தான் இருக்கும் என்றும், தமிழகத்தில் மக்கள் நம்பும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான் என்றும் கூறியுள்ளார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்காந்த் தான் முதல்வர் ஆவார் என்று வைகோ முழங்கியதும், விஜய்காந்த் உள்பட அந்த கூட்டணியில் உள்ள ஒருவரும் வெற்றி பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடி வீட்டில் அவசர ஆலோசனை.. அமித்ஷா, ராஜ்நாத் சிங் விரைவு..!

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments