தென்சென்னையில் தமிழிசை தேறுவாரா? கடைசி கட்ட நிலவரம் என்ன?

Siva
புதன், 17 ஏப்ரல் 2024 (15:45 IST)
தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிடும் நிலையில் கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அவரது நிலவரம் என்ன என்பதை பார்ப்போம்.

தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக சார்பில் ஜெயவர்தன் மற்றும் பாஜக சார்பில் தமிழிசை சௌந்தரராஜன் என மும்முனை போட்டி நடைபெற்றுள்ளது

மூவரும் மிகவும் தீவிரமாக கடந்த சில நாட்களாக பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் பிரச்சாரம் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் தென்சென்னை தொகுதியில் 30 ஆண்டுகளுக்கு மேல் தமிழிசை சௌந்தரராஜன் குடியிருப்பது என்பது ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தாலும் இந்த தொகுதியில் மாறி மாறி திமுக அதிமுக மட்டுமே வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்ற அனுதாபமும் மக்கள் மத்தியில் இருப்பதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு கூட்டணி பலம் இருப்பதால் அவர் எளிதில் வெற்றி பெறுவார் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் இரண்டாம் இடத்திலும் ஜெயவர்தன் மூன்றாம் இடத்துக்கும் தள்ளப்படுவார் என்று கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலர் பயிற்சி: திருச்சூரில் மைதானத்தில் இளம் பெண் உயிரிழப்பு

ரீல்ஸ் மோகத்தால் யமுனை ஆற்றில் தவறி விழுந்த பாஜக எம்எல்ஏ!

பீகார் தேர்தல்: மாதம் ரூ.2500 மகளிர் உதவித்தொகை.. வாக்குறுதிகளை அள்ளி வீசிய இந்தியா கூட்டணி..!

முதல்வர் ஸ்டாலின் தென்காசி வரும்போது எதிர்ப்பு தெரிவிப்போம்: மேலகரம் பெண்கள் ஆவேசம்..!

'SIR' வாக்காளர் திருத்த பணிக்கு கேரள முதல்வர் கடும் எதிர்ப்பு! பாஜகவின் சதி என குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments