Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேருந்து கட்டண குறைப்பை வரவேற்ற தமிழைசை சௌந்தர்ராஜன்

Webdunia
ஞாயிறு, 28 ஜனவரி 2018 (19:42 IST)
உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணம் மக்களின் தொடர் போராட்டங்களால்  குறைக்கப்பட்டுள்ளது. பேருந்து கட்டண குறைப்பு வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 
 
தமிழக அரசு பேருந்து கட்டணத்தை திடீரென உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது.  சரியான முன்னறிவிப்பின்றி,  பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறு எனவும், இதனால் தாங்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாகவும், இந்த கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என பொதுமக்களும், எதிர் கட்சி தலைவர்களும், மாணவர்களும் பல இடங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.
 
இந்நிலையில் மக்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டங்களால், பேருந்து கட்டணத்தை குறைத்து, தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாதாரண பேருந்துகளில் 10 கி.மீட்டர் வரை ஒரு கி.மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 58 பைசா குறைக்கப்படும்.  விரைவு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 80 பைசாவில் இருந்து 75 பைசாவாக குறைக்கப்படும்.  சொகுசு பேருந்துகளில் 30 கி.மீ. வரை 90 பைசாவில் இருந்து 80 பைசா வரை குறைக்கப்படும்.
 
அதிநவீன சொகுசு பேருந்துகளில் கி.மீட்டருக்கு 110 பைசாவில் இருந்து 100 பைசாவாக குறைக்கப்படும்.  குளிர்சாதன பேருந்துகளில் 140 பைசாவில் இருந்து 130 பைசாவாக குறைக்கப்படும். சென்னை மாநகர பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ.23ல் இருந்து ரூ.22 ஆகவும், குறைந்தபட்ச கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.4 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணக் குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்து கட்டண குறைப்பு வரவேற்கத்தக்கது, ஆனால் இந்த கட்டண குறைப்பு போதாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலரை விட்டு வெளியேறினால்.. இந்தியா உள்பட பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை..!

விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை.. மீட்பு பணிகள் தீவிரம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்து பள்ளி, கல்லூரிகளும் முகாம்களாக மாற்றம்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!

புயல் இன்னும் கரையை கடக்கவில்லை.. இன்று மாலை தான் கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன்

சென்னையில் 3 சுரங்கப்பாதைகள் மூடல்.. போக்குவரத்தில் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments