Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்டர் வந்தாச்சு பதவியேற்பு எப்போ? பரபரக்கும் தமிழிசை!

Webdunia
செவ்வாய், 3 செப்டம்பர் 2019 (19:17 IST)
தமிழிசையிடம் குடியரசு தலைவர் ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் பதவியேற்பு எப்போது என திட்டமிடப்பட்டு வருகிறது. 
 
தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் குடும்பத்தில் இருந்து, பாஜக்விற்குள் நுழைந்து பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் தமிழிசை இந்த பதவி தற்போது வழங்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் அளித்த பேட்டியில், எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத பதவி கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி அடைவதாக கூறினார். 
இந்நிலையில், தெலங்கானா ஆளுநர் மாளிகை ஆணையர் ஸ்ரீ வேதாந்தம் கிரி தமிழிசையின் இல்லத்திற்கு சென்று அங்கு அவரை சந்தித்து, குடியரசுத் தலைவர் ஆணையை வழங்குவார் என கூறப்பட்டது.  
 
அதேபோல் தமிழிசை ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்த ஆணையை அவரிடம் அளித்தார். இதனைத்தொடர்ந்து பதவியேற்புக்கான நாளை முடிவு செய்ய தமிழிசை தீவிரம் காட்டி வருகிறாராம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாற்றுத்திறனாளி குழந்தைக்கு வீடு வழங்கிய-தமிழக வெற்றிக்கழகம்!

ஆறு மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கொடிகளை 195 முட்டைகளில் வரைந்து இந்தியா உலக சாதனை

படகு போக்குவரத்து மற்றும் தீம் பார்க் ஆய்வு- தமிழ்நாடு சுற்றுலா துறை.

இடிந்து விழுந்த புதிய மேம்பாலம்..! தரமற்ற முறையில் கட்டியதாக புகார்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு .. அரசுக்கு உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments