Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை: தமிழிசை கருத்து

Webdunia
செவ்வாய், 6 மார்ச் 2018 (14:52 IST)
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் சம்பந்தமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா நேற்று திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் , ' 'லெனின் யார், அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு. கம்யூனிசத்திற்கும் இந்தியாவிற்கும் என்ன தொடர்பு. இன்று திரிபுராவில் லெனின் சிலை, நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா சிலை.. என்று பதிவு செய்திருந்தார்.
 
இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஸ்டாலின், வைகோ, சீமான், தொல்.திருமாவளவன், சுப.வீரபாண்டியன் உள்ளிட்டோர் எச்.ராஜாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
 
இது குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, பெரியார் சிலை உடைப்பது தொடர்பான எச்.ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமில்லை என்று பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments