தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலை உருவாக வாய்ப்பு என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் பேட்டி.
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
இந்நிலையில் தடுப்பூசி தடுப்பூசி போட்டால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது என்று புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் இருந்தால்தான் கல்வி நிலையங்களில் சேரலாம் என்ற நிலை உருவாக வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.