Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சோர்வடைய வேண்டாம், வெற்றி நிச்சயம்; நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு தமிழிசை அறிவுரை

Advertiesment
Tamilisai
, வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:57 IST)
சோர்வடைய வேண்டாம், வெற்றி நிச்சயம் என நீட் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு புதுவை கவர்னர் தமிழிசை அறிவுரை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
புதுச்சேரியில் இருந்து இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய 5,749 மாணவர்களில் 2,899 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், 675 மதிப்பெண்கள் பெற்று புதுச்சேரி மாநில அளவில் முதல் இடத்தையும், தேசிய அளவில் 1,249 இடத்தையும் பெற்றுள்ள மாணவர் குருதேவநாதனுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
நீட் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறிய மாணவர்களும், அதிக மதிப்பெண்கள் பெற இயலாத மாணவர்களும் மனம் சோர்வு அடையாமல் முயற்சிகள் செய்து வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகள்
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எல்லை மீறும் பிராங்க் வீடியோக்கள்: கோவையை அடுத்து சென்னையிலும் தடையா?