Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கருணாநிதி இருந்திருந்தால் காங்கிரஸ் கூட்டணியை அமைத்திருக்க மாட்டார்: தமிழிசை

கருணாநிதி இருந்திருந்தால் காங்கிரஸ் கூட்டணியை அமைத்திருக்க மாட்டார்: தமிழிசை
, வியாழன், 7 மார்ச் 2019 (09:05 IST)
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று விருதுநகரில் நடந்த தென்மண்டல திமுக மாநாட்டில் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து பேசிய நிலையில் இதற்கு பதிலடியாக இன்று தமிழிசை கூறியதாவது:
 
அன்று ஒரு கல்லூரி மாணவரை தேர்தலில் நிறுத்தி மாபெரும் மக்கள் தலைவரை தோற்கடித்த திமுக  அதே விருதுநகர் மண்ணில் நின்றுகொண்டு இன்று காமராஜரின் புகழ்பாட திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது? விஞ்ஞானபூர்வமான ஊழல்வாதிகள் எங்கள் ஊழலற்ற உத்தம தலைவன் மோடி காமராஜரின் புகழ்பாடுவதை விமர்சிக்கலாமா?
 
கலைஞர் உயிரோடிருந்தால்...இன்று ஸ்டாலின் அமைத்திருக்கும்  காங்கிரசுடனான கூட்டணியை அமைத்திருக்கமாட்டார்... ஏனென்றால் கூடாநட்பு கேடாய்முடியும் எனக் கூறியதும் அவர்தானே?
 
மேகதாது அணை கட்டுவதை மோடி ஏன் தடுக்கவில்லை என கேட்கும் திமுக தலைவர் ஸ்டாலின், அணை கட்டும் உங்கள் கூட்டணிக் கட்சியான காங்கிரசை அங்கே அணை கட்டவேண்டாம் என வெறும் கோரிக்கை கூட வைக்கவில்லையே? ஏன்? இதுதான் உங்கள் தமிழக விவசாயிகளின் மீதான அக்கறையா? இதிலும் மோடியை மட்டுமே குறை கூறுவது ஏன்?
 
webdunia
மோடி அரசு அனில்அம்பானிகளின் கார்பரேட் கம்பெனிகளுக்கான அரசு எனக் குற்றம் கூறும் ஸ்டாலின் அவர்களே, தமிழகத்தின் மிகப்பெரிய கார்ப்பரேட் கம்பெனி உங்கள் குடும்பமே? திமுகவினரே பல கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சொந்தக்கார்ரகள் பல கல்லூரிகளின் கல்வித்தந்தைகள்? இவர்கள் உருவானது உங்கள் ஆட்சியில்தானே?

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் மொத்த மானத்தையும் வாங்கிய சுதீஷ்: விஜயகாந்த் அப்செட்