Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனியும் தமிழகம் ஏமாறாது – ஸ்டாலுனுக்கு தமிழிசை பதில் !

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (12:08 IST)
மக்களவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிகள் சிறப்பாக செயல்படுவதாக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்ததை அடுத்து அவருக்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார்.

நீட் எதிர்ப்பு, இந்தித் திணிப்பு, சமூக நீதி உள்ளிட்டவை  ஆகிய விஷயங்கள் குறித்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்.பிகள் பேசி வருகின்றனர். இது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுபற்றி 37 எம்பிகளை வைத்துக்கொண்டு திமுகவால் ஒன்றுமே செய்ய முடியாது எனக் கூறியவர்களுக்கு இப்போது திமுகவினரின் சாதனைகள் புரியும் எனக் கூறி திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘தமிழக திமுக-காங் கூட்டணி எம்பிகளின் செயல்பாடுகள் குறித்து பெருமிதம் எனும் ஸ்டாலின் அவர்களே அவைக்குறிப்பில் ஏறாத கோஷங்கள் கோரிக்கை மனு அளிப்பு வேஷங்கள் இல்லாத இந்திதிணிப்பு எதிர்ப்பு நாடகங்கள் வந்துவிட்ட நீட்தேர்வுக்கு வீண் எதிர்ப்பும் வரமறுத்த காவிரிநீரை கோர மறந்த கூட்டணி தர்மம்?

ஏற்கனவே இருந்த ரயில் ஊழியர் மொழி பயன்பாட்டு அரசாணைகளை உடனே அமுலாக்கிய மையஅரசின் வேகத்தை எம்பிக்கள் சாதனை எனவீண் ஜம்பம்.பொய்வாக்குறுதி எனும் கமர்கட்தந்து காது கம்மலை திருடிய திமுக.ஊழல் விஞ்ஞானிகளின் காதறுந்த ஊசிகள் அங்கே.வீண்ஜம்பம் இங்கே?இனி தமிழகம் ஏமாறப்போவதில்லை தாமரை மலர்ந்தே தீரும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments