வைரமுத்து விவகாரத்தில் ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? தமிழிசை கேள்வி

Webdunia
திங்கள், 15 அக்டோபர் 2018 (13:21 IST)
எல்லா விஷயங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்திற்கு மட்டும் ஏன் இன்னும் எந்த கருத்தையும் சொல்லாமல் வாயை மூடிக்கொண்டிருக்கிறார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மீடூவில் பாடகி சின்மயி வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தார். வைரமுத்து மட்டுமல்லாமல் அவர் பல முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
 
இதற்கு பல்வேறு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சிப் பிரபலங்களும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், பெண்களுக்கு எதிராக பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான தண்டனை வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது.
 
தமிழகத்தில் நடைபெறும் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கெல்லாம் குரல் கொடுக்கும் ஸ்டாலின் வைரமுத்து விவகாரத்தில் எந்த கருத்தையும் கூறாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது ஏன்? வைரமுத்து திமுகவிற்கு வேண்டியவர் என்பதாலயா? என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்