விமானத்தில் பாஜகவுக்கு எதிராக முழக்கமிட்ட பெண் பயணி : சண்டைக்குப் போன தமிழிசை

Webdunia
திங்கள், 3 செப்டம்பர் 2018 (15:49 IST)
தூத்துக்குடி விமானத்தில் பாஜகவிற்கு எதிராக முழக்கமிட்ட பெண் பயணியுடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
திருநெல்வேலியில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்றார்.
 
விமானம் சென்று கொண்டிருந்த போது, தமிழிசையை கண்ட ஒரு பெண் பயணி ‘பாசிச பாஜக ஆட்சி ஓழிக’ என பாஜகவிற்கு எதிரான கண்டன முழக்கங்களை எழுப்பினார். இதைப்பார்த்து, தமிழிசையும், விமானத்தில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இதனால் கோபமடைந்த தமிழிசை அந்த பெண்ணுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். விமானம் தூத்துக்குடி சென்றடைந்த பின், விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை புகார் அளித்தார். ஏதோ ஒரு அமைப்பின் தூண்டுதலின் பேரில் அந்த பெண் தனக்கு எதிராக முழக்கம் எழுப்பியியதாக அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். அப்பெண்ணின் பெயர் சோபியா என்பது தெரிய வந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண் ஐடி ஊழியரை விடுதிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி.. மதுரை லாரி டிரைவர் கைது..!

டீக்கடை நடத்துபவரின் வீட்டில் ரூ.1 கோடி ரொக்கம்.. கிலோ கணக்கில் தங்கம்.. 75 வங்கி கணக்குகள்.. என்ன நடந்தது?

கணவரின் தம்பி பிறப்புறுப்பை துண்டித்த அண்ணி! உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

தீபாவளி ஸ்பெஷலாக அறிவிக்கப்பட்டிருந்த 6 சிறப்பு ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

வங்கக்கடலில் உருவாகிறது புயல் சின்னம்.. சென்னைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments