Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம்; அதிரடியாக களமிறங்கிய தமிழிசை

Webdunia
சனி, 9 செப்டம்பர் 2017 (17:43 IST)
திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
 

 

 
திமுக உட்பட்ட எதிர்க்கட்சியினர் நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து திருச்சியில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடத்தினர். இது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகிய இருவரும் சேர்ந்து திருச்சியில் போராட்டத்தில் ஈடுப்பட்ட மாணவர்களை சந்தித்தனர்.
 
இந்நிலையில் திமுக உள்பட எதிர்க்கட்சிகளின் எதிர்மறை அரசியலை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
நீட் தேர்வில் உள்ள நிலையை தமிழக மக்களுக்கு எடுத்துக் கூறவும், எதிர்க்கட்சிகளின் எதிர்மறைப் பிரச்சாரத்தை முறையடிக்கவும் இந்த பொதுக்கூட்டம் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments