Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவத்தினருக்கு நன்றி : அமர்நாத் யாத்திரையில் சிக்கிய தமிழர்கள் பேட்டி (வீடியோ)

Webdunia
வெள்ளி, 6 ஜூலை 2018 (09:54 IST)
மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரையில் பக்தர்களை காத்த இந்திய ராணுவத்திற்கு தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
 
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகையில் இந்த ஆண்டு தோன்றியுள்ள பனி லிங்கத்தை இதுவரை 60 ஆயிரத்து 752 பக்தர்கள் தரிசித்துள்ளனர். இன்னும், 27 ஆயிரத்து 426 பேர் ஜம்மு முகாமில் காத்து இருக்கின்றனர். இதற்கிடையே மோசமான வானிலை மற்றும் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 
 
பஹல்காம் முகாமில் இருந்து நேற்று புறப்பட்ட 1798 பேரும் தற்போது உதம்பூரில் நிறுத்தி வைக்கப்பட்டு அங்குள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் நேற்று மதியம் முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அமர்நாத் பக்தர்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், வானிலை சீரானதும் யாத்திரை தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 
இதனிடையே தமிழகத்தினை சார்ந்த பக்தர்கள் நேற்று முன் தினம் (செவ்வாய் கிழமை) இரவு பத்திரமாக தமிழகத்திற்கு வந்தனர். கரூர், பரணி பார்க் பள்ளியின் முதன்மை முதல்வர் முனைவர் ராமசுப்பிரமணியன், உள்ளிட்ட குழுவினர் தமிழகத்திலிருந்து 8 நபர்கள் அமர்நாத் சென்றிருந்த நிலையில் இயற்கை வானிலை சீராக இல்லாத நிலையில் அமர்நாத் பனிலிங்கத்தினை தரிசிக்க சுமார் 3 நாட்கள் தாமதமானதுடன், அங்கே நடைபெற்ற நிலச்சரிவில் 11 பக்தர்கள் உயிரிழந்தனர். 
 
இந்நிலையில், இந்திய ராணுவத்தினர் பக்தர்களை மீட்டு, அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தந்ததோடு, பனிலிங்கத்தை தரிசிக்க, ராணுவத்தினரும், ஜம்மு காஷ்மீர் போலீஸார் மற்றும் BSF வீரர்கள் பெரிதும் உதவிய நிலையில், அவர், இந்திய ராணுவத்தினருக்கு தனது நன்றியினையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.
 
பேட்டி : முனைவர் ராமசுப்பிரமணியன் - கரூர்
 
-சி.ஆனந்தகுமார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments