விஜய் தான் முதல்வர் வேட்பாளர்.. கூட்டணி அமைக்க முழு அதிகாரம்: தவெக தீர்மானம்..!

Siva
வெள்ளி, 4 ஜூலை 2025 (15:39 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், இந்த கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன. அதில், முதல்வர் வேட்பாளர் விஜய் தான் என்றும், கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த விஜய்க்கு முழு அதிகாரம் தரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், விஜய் வரும் செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், ஆகஸ்ட் மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது மாநில மாநாடு திருச்சி அல்லது மதுரையில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
 
விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தமிழக வெற்றிக் கழகத்தின் தீர்மானங்களில் ஒன்று இயற்றப்பட்டுள்ளதால், கூட்டணிக்கு வரும் கட்சிகளும் அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மறைமுக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரை தவிர அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா.. புதிய அமைச்சர்கள் நாளை பதவியேற்பு..!

பிரதமர் மோடி பொதுக்கூட்ட இடத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் பலி.. ஆந்திராவில் சோகம்..!

4 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி, ரூ.1 கோடிக்கும் மேல் ரொக்கம்.. ஓய்வு பெற்ற அதிகாரி வீட்டில் சோதனை.!

திமுக-வின் ஃபெயிலியர் ஆட்சிக்கு முடிவுரை.. தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுகவின் பொற்கால ஆட்சி: ஈபிஎஸ்

மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: சதுரகிரி மலை ஏறுவதற்கு தடை.. பக்தர்கள் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments