Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

Siva
வெள்ளி, 28 மார்ச் 2025 (09:14 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் இன்று நடக்கிறது. சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் காலை 9 மணிக்கு தொடங்கவுள்ள இந்த கூட்டத்தில், கட்சி தலைவர் விஜய் தனது வருகையை பதிவு செய்துள்ளார்.
 
3000 பேர் வரை நிர்வாகிகள் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக  போட்டியிடும் என்று விஜய் முன்பே அறிவித்திருப்பதால், மாநிலம் முழுவதும் நிர்வாகிகளை நியமித்து, கழகத்தின் அமைப்பை வலுப்படுத்தும் பணியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
 
சமீபத்தில் கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா சிறப்பாக நடந்த நிலையில், இன்று நடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒருவரை பிரதிநிதியாக அழைத்துள்ளன.
 
இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்