Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக அமைச்சருக்கு பண மாலை போட்ட தவெக நிர்வாகி.. விஜய்க்கு எழுதிய மன்னிப்பு கடிதம்..!

Mahendran
புதன், 11 ஜூன் 2025 (10:15 IST)
திமுக அமைச்சருக்கு தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகி பண மாலை போட்டு வரவேற்ற நிலையில், அவர் தற்போது விஜய்க்கு மன்னிப்பு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
தமிழக வெற்றி கழகத்தின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் பாரதிதாசன் என்பவர் தனது வீட்டிற்கு கிரகப்பிரவேச விழா நடத்தினார். இந்த விழாவுக்கு அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்ட நிலையில், அவருக்கு பாரதிதாசன் ரூபாய் நோட்டு மாலை அணிவித்து வரவேற்றதாக புகைப்படம் வெளியானது.
 
 தமிழக அரசையும், திமுகவையும் ஒரு பக்கம் மிக கடுமையாக தமிழக வெற்றிக்கழகம் தாக்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் நிர்வாகி திமுக அமைச்சருக்கு பண மாலை போட்டு வரவேற்பு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. 
 
இதனை அடுத்து, விஜய்க்கு பாரதிதாசன் மன்னிப்பு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், "அமைச்சர் என்பதால் அவருக்கு மரியாதை செய்யும் வகையில் ரூபாய் நோட்டு மாலை அணிவித்ததாகவும், அச்செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பதாகவும்," கூறியுள்ளார். "இனி வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காது," என்றும் அந்த மன்னிப்பு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேளாண்சார் தொழில்களுக்கு மகத்தான எதிர்காலம்! ஈஷா அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா 2.O

ராகுல்காந்தி இந்திய அரசியலமைப்பையே அவமதித்துவிட்டார்! - தேர்தல் ஆணையர் வேதனை!

காதலியின் கைப்பிடிக்க மனைவி கொலை! திருட்டு என நாடகமாடிய பாஜக உள்ளூர் தலைவர்!

திருமாவளவனுக்கு சமூகநீதி தேவையில்ல.. தேர்தல் சீட்தான் தேவை! - மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்!

முன்பு வாக்கு திருட்டு தெரியாமல் இருந்தது, ஆனால் இப்போது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது: ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments