Publish Date: Wed, 14 Apr 2021 (13:23 IST)
Updated Date: Wed, 14 Apr 2021 (13:24 IST)
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வந்தாலும் ஒரு சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறிய அறிவிப்பு ஒன்றின் படி தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தி.மலை, தருமபுரி, சேலம், குமரி, நெல்லை, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.