Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்கும் சென்னை மக்கள்.. நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!

Siva
வியாழன், 30 மே 2024 (08:05 IST)
கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் கொளுத்தி வரும் நிலையில் படிப்படியாக வெயில் குறைந்து மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளதை அடுத்து சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கோடை காலத்தில் தென் மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பிற மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழை முதல் கனமழை பெய்தாலும் சென்னையில் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை என்பதும் அதனால் தொடர்ந்து வெப்பநிலை அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் முடிவடைந்ததை அடுத்து ஜூன் இரண்டாம் தேதி முதல் வெயில் படிப்படியாக குறையும் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். ஜூன் இரண்டாம் தேதி முதல் சென்னை மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் வெயில் குறையும் என்றும் அதன் பிறகு படிப்படியாக மழை ஆரம்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தென் தமிழக பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு  சுழற்சி நிலவி வருவதாகவும் இதனால் தென் மாவட்டங்களில் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் ஜூன் இரண்டாம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் ஜூன் இரண்டாம் தேதிக்கு பிறகு படிப்படியாக வெப்பம் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments