கேரளாவில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் அதன் தாக்கம் தமிழகத்தில் இருக்கும் என்றும் தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஜூன் 1, 2 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
மேலும் தமிழ்நாடு புதுச்சேரியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கேரளாவில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவின் அண்டை மாநிலம் தான் தமிழகம் என்பதால் தமிழகத்தில் மழையின் தாக்கம் இருக்கும் என்றும் ஜூன் முதல் வாரத்திலேயே தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.