தமிழ்நாட்டுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் 12 முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பொழிவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக இன்று, நவம்பர் 25, மற்றும் நவம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு மையம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அது மேலும் வலுவடைந்து புயலாக உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதால், மூன்று நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்ட மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.