98 சதவீத கொரோனா தடுப்பூசி டோஸ்களை பொதுமக்களுக்கு செலுத்தி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றாக்குறை இருந்ததன் காரணமாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை இருந்தது. ஆனால் தமிழக அரசு கொடுத்த அழுத்தம் மற்றும் மத்திய அரசு அளித்துவரும் தடுப்பூசி காரணமாக தடுப்பூசி பற்றாக்குறை இல்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட மொத்தம் 12 கோடி டோஸ் தேவைப்படும் நிலையில், மத்தியஅரசு இதுவரை 2 கோடி டோஸ் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. இதில் 98 சதவீத டோஸ்களை பொதுமக்களுக்கு செலுத்தி தமிழக அரசு சாதனை படைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.