குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என தகவல்.
சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும்.
மேலும் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர் , தென்காசி, ஈரோடு, சேலம் ,திருவள்ளூர், ராணிப்பேட்டை ,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.