தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை!

Webdunia
திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (13:57 IST)
தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.


தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் தினந்தோறும் மழை குறித்த தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வரும் நிலையில் இன்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அறிவிப்பின் படி, மேற்கு திசை காற்றின் வேக மாறுபட்டால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அறிவித்துள்ளது.

நாளை நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்தது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் இணக்கமா?!... நாஞ்சில் சம்பத் கேள்விக்கு விஜய் சொன்ன பதில்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு விருந்து.. ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை.. சசிதரூருக்கு அழைப்பு..!

டெல்லி - லண்டன் விமான டிக்கெட்டை விட டெல்லி - மும்பை கட்டணம் அதிகம்.. பயணிகள் அதிர்ச்சி..!

செங்கோட்டையனை அடுத்து நாஞ்சில் சம்பத்.. தவெகவுக்கு குவியும் தலைவர்கள்..!

விஜய் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம்.. அனுமதி அளித்தது புதுவை அரசு..!

அடுத்த கட்டுரையில்
Show comments