Publish Date: Sat, 13 Jun 2020 (15:43 IST)
Updated Date: Sat, 13 Jun 2020 (15:59 IST)
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவமழை காரணமாக மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நீலகிரி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும் குறைந்தபட்சமாக 29 டிகிரி செல்சியசும் பதிவாகும்.