வாடகைக்கு எடுக்கப்படும் ஆம்னி பேருந்துகள்: தமிழக போக்குவரத்து கழகம் திட்டம்..!

Mahendran
செவ்வாய், 15 ஏப்ரல் 2025 (11:01 IST)
கோடை விடுமுறையை ஒட்டி, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்குப் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதேபோல், கோடை வாசஸ்தலங்கள் மற்றும் சுற்றுலா தலங்களுக்கும் அதிகமான பயணிகள் செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
 
இந்த நிலையை கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசின் போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 
பயணிகள் தேவை மற்றும் கூட்டத்தை பொறுத்து, படுக்கை வசதி  கொண்ட ஆம்னி பேருந்துகள் உள்பட சில வகை பேருந்துகளை வாடகைக்கு எடுக்க அரசு விரைவு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 
இது குறித்த முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்.. வைரல் வீடியோவால் பரபரப்பு..!

திடீரென முடங்கிய ஐஆர்சிடிசி இணையதளம்.. தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவிப்பு..!

மதுரை மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்பு: 5 நிமிடங்களில் முடிந்த பரபரப்பு!

மகனின் உயிரை காப்பாற்ற சிறுநீரக தானம் அளித்த 72 வயது தாய்.. நெகிழ்ச்சியான சம்பவம்..!

ரஷ்ய போரில் உயிரிழந்த கேரள இளைஞர்.. 10 மாதம் ஆகியும் சடலமும் வரவில்லை, இறப்பு சான்றிதழும் கிடைக்கவில்லை..

அடுத்த கட்டுரையில்
Show comments