அதானி நிறுவனத்திற்கும் தமிழக மின்சார வாரியத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக மின்சார வாரியத்தை பொறுத்தவரை, அதானி நிறுவனத்தோடு எந்தவிதமான ஒப்பந்தமும் கடந்த மூன்று ஆண்டுகளாக போடவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் மின் தேவைக்காக, மத்திய மின்சாரத்துறை வாரியத்தின் அமைப்புகளோடு 1500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிறுவனத்துடன் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் உறுப்பினர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, என்ற மத்திய அரசின் நிறுவனம், யார் யார் மின் உற்பத்தி செய்கிறார்களோ அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கூட 2.61 ரூபாய்க்கு மின்சாரம் கொள்முதல் செய்கின்றனர்.
எனவே, தமிழக மின்சார வாரியத்திற்கும் அதானி நிறுவனத்துக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்றும், இது தொடர்பாக சந்தேகம் இருந்தால் அதை தெளிவுபடுத்த தமிழக அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.