Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம் முழுவதும் ஒரே மாதிரி தளர்வு: என்னென்ன செயல்படும்??

Webdunia
திங்கள், 5 ஜூலை 2021 (08:19 IST)
தமிழகத்தில் இன்று முதல் ஒரே மாதியான கூடுதல் தளர்வுகளுடன் இன்று தமிழகம் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளது. 

 
தமிழகத்தில் இன்று முதல் ஒரே மாதியான தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் இன்று தமிழகம் தனது இயல்பு வாழ்க்கையை தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, 
 
1. மாவட்டத்துக்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பொது பேருந்து போக்குவரத்து 50% இருக்கைகளில் மட்டும் குளிர்சாதன வசதிகள் இல்லாமல்  பயணிக்கலாம்.
 
2. உணவகங்கள், விடுதிகள், அடுமனைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களிலுள்ள உணவகங்களில் காலை 6.00 மணி முதல் மாலை 8.00 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்தலாம்.  
 
3. தேநீர்க் கடைகளில் ஒரே நேரத்தில் 50% வாடிக்கையாளர்கள் தேநீர் அருந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
 
4. அனைத்து மாவட்டங்களிலும் கேளிக்கை விடுதிகள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் உரிய கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிச் செயல்பட அனுமதி. 
 
5. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வழிபாட்டுத் தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
6. வணிக வளாகங்கள் (Shopping complex / Malls) காலை 9:00 மணி முதல் மாலை 8:00 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
 
7. வணிக வளாகங்களில் உள்ள உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவருந்த அனுமதி. 
 
8. வணிக வளாகங்களிலுள்ள திரையரங்குகள் மற்றும் விளையாட்டு கூடங்கள் இயங்க அனுமதியில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments