Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மகிழ்ச்சி! வருகிறது 50 பள்ளிகளில் இலவச அம்மா வைஃபை

Advertiesment
மகிழ்ச்சி! வருகிறது 50 பள்ளிகளில் இலவச அம்மா வைஃபை
, சனி, 24 செப்டம்பர் 2016 (04:13 IST)
விரைவில் தமிழகத்தின் 50 பள்ளிகளில் அம்மா இலவச வைஃபை மண்டலங்களை அமைக்கப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

 
அம்மா குடிநீர், அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட் இவற்றை தொடர்ந்து பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் பூங்காக்களில் அம்மா வைஃபை மண்டலங்களை தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி அமைக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது.
 
மேலும் தேர்தல் வாக்குறுதியில் கூறியிருந்தபடி உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் எனவும் முதல்கட்டமாக 50 பள்ளிகளில் இது அமல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேறு பெண்ணை திருமணம் செய்த கணவன் முகத்தில் ஆசிட் வீசிய மனைவி