Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனிக்கிழமை ரம்ஜான்: நாளை பள்ளி விடுமுறை ரத்து

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (22:36 IST)
"தமிழகத்தில் ரம்ஜான் :பண்டிகை வரும் சனிக்கிழமை கொண்டாடப்படும் என்றும் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் அதாவது வரும் சனிக்கிழமை தான் ரம்ஜான் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார். இதனால் சனிக்கிழமை தான் ரம்ஜான் பண்டிகை என்பது உறுதியாகியுள்ளது.
 
இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி நாளை பள்ளிகள் விடுமுறை என்று ஏற்கனவே தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் அறிவித்திருந்த அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக வரும் சனிக்கிழமை விடுமுறை என அறிவித்துள்ளது. இதற்கான அரசாணைகளையும் தமிழக, புதுச்சேரி அரசுகள் வெளியிட்டுள்ளன
 
இதனையடுத்து நாளை வழக்கம்போல் அலுவலகங்கள், பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் .மூன்று நாட்கள் விடுமுறை என நினைத்து பலரும் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்தும், கிளம்ப உள்ள நிலையில் இந்த விடுமுறை ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments