செப்டம்பர் 15ம் தேதி ராஜீவ் கொலையாளிகள் விடுதலை?
செப்டம்பர் 15ம் தேதி ராஜீவ் கொலையாளிகள் விடுதலை?
அண்ணா பிறந்த நாளையொட்டி வருகிற செப்டம்பர் 15ம் தேதி, தமிழக சிறையில் பல வருடங்களாக உள்ள கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளன்று, சில கைதிகளை விடுதலை செய்யும் வழக்கம் தமிழகத்தில் 2008ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. ஆனால், இதனை எதிர்த்து பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனால் அந்த நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், தமிழக அரசின் அரசாணையில் நாங்கள் தலையிட முடியாது என்று கடந்த மே மாதம் 16ம் தேதி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால், இந்த ஆண்டு கைதிகளை விடுவிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
முக்கியமாக, கடந்த 25 வருடங்களாக சிறையில் வாடும் ராஜீவ் கொலையாளிகள், ஆட்டோ சங்கரின் தம்பி மோகன், சந்தனக் கடத்தல் வீரப்பனின் அண்ணன் மாதையன் ஆகியோர் விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
161வது பிரிவை பயன்படுத்தி தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.